தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்களுக்கான புது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கோடை விடுமுறையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு விருப்பமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
ஆனால் கடந்த ஆண்டு கலந்தாய்வு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு ஜூன் ஜூலை மாதம் வரை நடந்தது.
இதனால் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் சேர காலதாமதம் ஏற்பட்டது எனவே நடப்பாண்டு உடனடியாக மாறுதல் கலந்தாய்வினை அறிவிப்பை வெளியிட்டு பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்களுக்கான பொதுமறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறி இருப்பதாவது
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை கலந்தாய்வு நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
கலந்தாய்வு தேதி அறிவித்தாலும் விருப்பமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறுவது முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது கல்வி மாவட்டம் வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என அட்டவணை தயாரிப்பது என அடுத்தடுத்து நடவடிக்கைகள் நடக்கும்.
கோடை விடுமுறையில் மாறுதல் கலைந்தாய்வு நடத்தினால் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஏற்ப தங்களது குடியிருப்பு மற்றும் இதர வசதிகளை விடுமுறையிலேயே ஏற்பாடு செய்து கொள்வார்கள்
குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெரும் ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே தங்களது புது மாவட்டங்களுக்கு சென்று தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்வார்கள்
மேலும் பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர்ந்து பணியை மேற்கொள்ள முடியும்.
எனவே கடைசி நேர அழுத்தம் தவிர்க்கும் வகையில் உடனடியாக கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டு விருப்பமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும் இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்
தண்டனை ஆசிரியர்களுக்கு கட்டாய நிபந்தனை
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிர்வாக மாறுதல்கள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலும் இவை சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீதான புகாரின் அடிப்படையில் ஒரு பபள்ளியிலிருந்து
இவர்கள் தண்டனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டாலும் அடுத்து நடக்குமாறுதல் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு உடனடியாக விரும்பிய வேறொரு பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்.
இதனால் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாறுதல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது.
எனவே இதுபோன்று புகாரி அடிப்படையில் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்த பின்னரே மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.
No comments:
Post a Comment