சட்டப் படிப்பு சேர்க்கை 2025 - விண்ணப்பம் தொடக்கம்! - Asiriyar.Net

Wednesday, May 14, 2025

சட்டப் படிப்பு சேர்க்கை 2025 - விண்ணப்பம் தொடக்கம்!

 



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 3,024 இடங்கள் உள்ளன.


இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12)முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


விருப்பம் உள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்ஆப் மதிப்பெண் விவரங்களை சட்டப் பல்கலைக்கழகம் பின்னர் வெளியிடப்படும்.


No comments:

Post a Comment

Post Top Ad