Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, August 25, 2026

SMC மறு கட்டமைப்பு - பெற்றோர்களுக்கு 29.08.2026 (சனிக்கிழமை) அன்று விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த உத்தரவு - SPD Proceedings




பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தொடர்பாக பெற்றோர்களுக்கு 29.08.2026 (சனிக்கிழமை) அன்று விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்


பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,

மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment

LightBlog