Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, August 24, 2026

TET தேர்வு ரத்து செய்ய வேண்டும் - சட்டப்பேரவையில் ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த எம் எல் ஏ


சட்டப்பேரவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் ஆசிரியர் நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட கோரிக்கை 


இது கறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதியாக தவெக எம்எல்ஏ சிந்து அவர்கள்  ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்து சீனியாரிட்டி அடிப்படையிலான பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை  வைத்தார்


மேலும் அதைத் தொடர்ந்து பேசிய எம்எல்ஏ தானும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மேலும் நியமன தேர்வையும் தேர்ச்சி பெற்று இன்றுவரை அரசு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார் 


ஆசிரியர் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் பாதி பகுதி இதற்காகவே செலவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார் 


*சட்டமன்ற உரையின் முக்கிய அம்சங்கள்


TET தேர்வு ரத்து கோரிக்கை:*

ஆசிரியர் பணி நியமனத்திற்கான **TET (Teacher Eligibility Test)** தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.


சீனியாரிட்டி அடிப்படையிலான நியமனம்:

தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு / பணி மூப்பு (Seniority) அடிப்படையில் ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆசிரியர்களின் கோரிக்கை: 


ஆசிரியர் பட்டதாரிகள் மற்றும் சங்கங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சட்டமன்றப் பேச்சு அமைந்துள்ளது.


தவெக எம்எல்ஏ திருமதி சிந்து அவர்கள் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ ஆவார்


No comments:

Post a Comment

LightBlog