Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, August 11, 2026

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை VAO கண்காணிக்க அரசு உத்தரவு




மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை வி. ஏ.ஒ.க்கள் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது .


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 நடந்து வருகிறது. ஆக 31 க்குள் முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டிய போதும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.


இந்நிலையில் ஊராட்சிகளில் கணக்கெடுக்கும் பணியை கண்காணிக்க வி. ஏ. ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வி.ஏ.ஒ., க்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இது தொடர்பாக வி.ஏ. ஒ., க்கள் கூறுகையில், ‘ஊராட்சியில் குறைந்தது 5 ஆசிரியர்கள் இப்பணியை மேற்கொள்வார்கள். யாரை நாங்கள் கண்காணிப்பது. ஊராட்சி செயலர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். பின் எதற்காக எங்களை நியமித்துள்ளனர். இதனால் எங்களின் வழக்கமான பணிகள் பாதிக்கும்,’ என்கின்றனர்.

No comments:

Post a Comment

LightBlog