Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, August 11, 2026

6 நாட்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பை (HLB) முடித்த ஆசிரியர் - அதிகாரிகள் பாராட்டு

நாகை மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள முத்தப்பேட்டை பகுதியில், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியரான அசோக் குலந்தைவேலு என்பவர் மக்கள் தொகை கணக்கெடுப்புப் (HLB) பணியினை வெறும் 6 நாட்களில் முடித்து சாதனை படைத்துள்ளார்

ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்தி 33 கேள்விகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி, இந்தப் பணியானது மேற்கொள்ளப்படும்.

இந்தநிலையில் ஆகஸ்ட் முதல் துவங்கி வரை முடியும் இந்த பணியை ஆசிரியர் ஒருவர் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில் தீவிரமாக பணியாற்றி 6 நாட்களில் முடித்துள்ளார். இது அதிகாரிகள் மட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதில் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோக். இவருக்கு முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகம் பகுதிக்கு உட்பட்ட நமசிக்காடு பகுதியில் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப்பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அன்று முதல் தொடர்ச்சியாகச் செயல்பட்டு பணியை நேற்று நிறைவு செய்து அதற்கான கோப்புகளை முத்துப்பேட்டை தாசில்தார் பிரேமாவிடம் ஒப்படைத்தார். 

இதனை கண்டு ஆச்சரியமடைந்த தாசில்தார் பிரேமா ஆசிரியர் அசோக்கிற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார் 

இது போன்று துரிதமாக ஆர்வத்துடன் செயல்பட்டு பணியை முடிதுக்கொன்டுத்த ஆசிரியர் ஆசிரியர் அசோக்கிற்கு வருவாய்த் துறை அதிகாரிகளும் கல்விதுறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





No comments:

Post a Comment

LightBlog