Census HLO APP-இல் "திருத்தம் செய்ய கூடியவை & திருத்த முடியாதவை" - Asiriyar.Net

Sunday, August 9, 2026

Census HLO APP-இல் "திருத்தம் செய்ய கூடியவை & திருத்த முடியாதவை"




HLO APP-இல் ஒருமுறை பதிவு செய்து விட்டு 

மீண்டும் திருத்த முடியாதவை
  • வரிசை எண் (Line Number) 
  • கட்டிட எண் (Building Number)
  • கணக்கெடுப்பு வீட்டு எண் (Census House Number)
  • குடும்பத்தின் பயன்பாடு (Use of Census house)

Sync செய்வதற்கு முன்: 
நீங்கள் சப்மிட் (Submit) செய்வதற்கு முன்பு செயலில் உள்ள அனைத்து விவரங்களையும் (வீட்டின் பயன்பாடு, நபர்களின் எண்ணிக்கை, கட்டடத்தின் தளம் போன்றவை) தேவைக்கேற்ப எடிட் (Edit) செய்யலாம்.

Sync செய்த பிறகு: 
சர்வரில் தரவு பதிவேற்றம் செய்யப்பட்ட பின், எழுத்துப்பிழைகள் அல்லது பிற விடுபட்ட தகவல்களைத் திருத்த, உங்கள் மேற்பார்வையாளரின் (Supervisor) பரிந்துரையுடன் HLO App -ல் "ஏற்கனவே Sync செய்யப்பட்ட தரவை சரிசெய்வதற்கான" (Modify Synced Data) பிரத்யேக ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.

திருத்தம் செய்ய கூடியவை.
4  முதல் 34 வரை உள்ள கேள்விகள்  *தரவை புதுப்பிக்க*   அல்லது *synced தரவைத் திருத்த* மூலம் கணக்கெடுப்பாளரே தவறுகள் இருப்பின் சுயமாக திருத்தி கொள்ளலாம்.

மேலும், supervisor தவறுகள் கண்டறிந்து வரி எண் விவரத்தை திருப்பி அனுப்பும் பட்சத்தில் கணக்கெடுப்பாளர்கள் வரி எண்ணைக் குறித்துக் கொண்டு பின்னர் சுருக்கத்தை கிளிக் செய்து அதன் கீழ் வரும் விவரங்களை திருத்த வேண்டிய வரி எண்ணுக்குரிய 4 முதல் 34 வரை அனைத்து கேள்விக்கான பதிலை முதலில் குறித்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் நாம் அந்த வரி எண்ணுக்குரிய தகவல்களை (4-34 பதில்கள்) திருத்தம் செய்து கொள்ளலாம்.

நன்றி 🙏🏻


No comments:

Post a Comment

Post Top Ad