தமிழக பட்ஜெட் 2026-ல் கல்வி சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? - Asiriyar.Net

Wednesday, August 5, 2026

தமிழக பட்ஜெட் 2026-ல் கல்வி சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?




தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை சட்டப்​பேரவையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்:

> கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் வெற்றி மடிக்கணிணி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

> பொது நூலங்களை டிஜிட்டல் நூலகங்களாக உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ரூ.3.38 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

> மாணவர் தங்கும் விடுதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

> 12 லட்சம் கல்லூரி மாணவர்கள். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழி திறன் பயிற்சி வழங்கப்படும்.

> 11ம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில்கள் கொண்ட நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.277 கோடி நிதி ஒதுக்கப்படும்.

> நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

> அரசுப் பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.

> ரூ.90 கோடி நிதியில் 5 தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.

> பள்ளி பாடத்திட்டத்தை சீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும்.

> மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கையுடன் சட்டக் கல்லூரி அமைக்கப்படும்.

> வெற்றி திறன் பயிற்சி திட்டத்துக்கு ரூ.150 நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

> அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

> தமிழ்நாடு சுடர் திட்டத்துக்கு ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கப்படும்.

> பள்ளி நேரம் முடிந்ததும் விளையாட்டுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

> வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும்.

> பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க 1058 என்ற கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்படும்.

> போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பை உருவாக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மொத்தமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad