மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணிக்கு இன்று முதல் (ஆக.,1) ஆசிரியர்கள் களம் இறங் கும் நிலையில் ஆக.,3 முதல் கலைத் திருவிழா போட்டிகளையும் நடத்த கல்வித்துறை நெருக்கடி கொடுப்பதால் அதிருப்தி யில் உள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக வீடு களை கணக்கிடும் பணி யில் ஆசிரியர்கள் இன்று முதல் இம்மாதம் 31 வரை ஈடுபடுகின்றனர். இவர் கள், கற்பித்தல் பணியை முடிந்துவிட்டு மாலை நேரம், சனி ஞாயிறு அன்று களப் பணிக்கு செல்ல உளளனர்.
ஒவ்வொரு ஆசிரியர் களுக்கும் 300 முதல் 400 வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
கேரளாவில் 30 இப்ணியை ஆசிரியர் மனஉளைச்சல் இன்றி மேற் கொள்ள 10 முழு அல்லது 20 அரை வேலை நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
ஆனால் தமிழ கத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கூட கல்வித்துறை தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ஆக., 3 முதல் 31 வரை கலைத் திருவிழா போட்டிகளை நடத்த அதி காரிகள் உத்தரவிட்டுள்னர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: மக்கள் தொகை பணிக்கு ஒரு வீட்டிற்கு 31 கேள்விகள் கேட்டு செயலி யில் பதிவு செய்ய வேண் டும். வீட்டு முகவரியுடன் 'லொகேஷனை'யும் அடை யாளப்படுத்தி 'அப்லோடு' செய்ய வேண்டும். இதற்கு ஒரு வீட்டுக்கு 30 - 45 நிமி டங்கள் தேவைப்படும்.
ஆக.,3 கலைத் திருவிழா போட்டிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் படி ஒன்று முதல் பிளஸ் 2 வரை 170 போட்டிகளை நடத்தி வெற்றி விபரங் களை போட்டோக்களுடன் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
இது ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. 'டி.என்.,ஸ்பார்க்' தேர்வுக் மாணவர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. கலைத் திருவிழா போட் டிகளை காலாண்டு தேர் வுக்கு பின் நடந்த வேண் டும் என்றனர்.


No comments:
Post a Comment