எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை (ஆக. 20) அறிவித்துள்ளது.
எஸ்பிஐ கிளை வழியாகத் திறக்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (பிஎஸ்பிடி) கணக்குகளுக்கான பணம் எடுக்கும் கட்டணங்களை, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.15 மற்றும் அதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.
இருப்பினும், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு என்பது குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்ற அவசியமில்லாத கணக்கு. இதற்கு காசோலை புத்தகமும் வழங்கப்படாது.
ஏற்கெனவே, ஐந்து பரிவர்த்தனைகளாக இருந்த விதியை தற்போது நான்கு பரிவர்த்தனைளாக எஸ்பிஐ மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment