Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 19, 2026

3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு - அமைச்சர் சரத்குமார் பேரவையில் அறிவிப்பு




முன்னதாக, 2 குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் விடுப்பு வழங்கி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு விதிகளின் திருத்தங்களைத் தொடர்ந்து தற்போது 3-வது குழந்தைகளுக்கும் முழுமையான மகப்பேறு விடுப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பெண் ஊழியர்கள் தங்களின் 3-வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போதும், அவர்களுக்குத் தலா 365 நாட்கள் (ஓராண்டு) முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதிப் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கிய அறிவிப்புகள்:

அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தை பிறக்கும் போது, 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

*போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக ரூ.20 லட்சம் செலவில் 'வெற்றி பாதை' என்ற புதிய செயலி உருவாக்கப்படும்.

*தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் வகையில் தனிச் செயலி ஒன்று உருவாக்கப்படும்.

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (TNPSC) கூடுதல் இணைப்புச் கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும்.

இதுவரை தமிழக அரசுப் பணியாளர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் (1 வருடம்) மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. 3-வது குழந்தைக்கு 12 வாரங்கள் (84 நாட்கள்) மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்பட்டது.

பிரசவத்திற்குப் பிந்தைய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், குழந்தையைப் பராமரிக்கவும் இந்த விடுப்பு காலம் போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு, இனி 3-வது குழந்தைப் பேறுக்கும் முழுமையாக 365 நாட்கள் (1 ஆண்டு) விடுப்பு உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர் சங்கங்களும், பெண் பணியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

LightBlog