Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 19, 2026

1-9-2026 முதல் இறுதி ஒப்பளிப்பு களஞ்சியம் App மூலம் மட்டுமே அனுப்பிட வேண்டும்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இறுதி ஒப்பளிப்பு ஆணைக்கான முன்மொழிவுகளை களஞ்சியம் (IFHRMS) இணையதளம் வழியாக 01-09-2026 முதல் அனுப்பக் கோருதல் - தொடர்பாக


பார்வை- 1 ல் காணும் அரசாணையில் 01-04-2003-க்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகையினை பெறுவதற்கான கருத்துரு தொடர்புடைய அலுவலகத்தில் இருந்து களஞ்சியம் (IFHRMS) இணையதளம் வாயிலாகவும் (Online), தபால் மூலமாகவும் (Offline) இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் இறுதி ஒப்பளிப்பு ஆணைகள் தொடர்புடைய அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 01-09-2026 முதல் அனைத்து பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இறுதி ஒப்பளிப்பு ஆணையினை பெறுவதற்கான முன்மொழிவுகளை தொடர்புடைய பணிப்பதிவேடு மற்றும் இதர இணைப்புகளை களஞ்சியம் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும் எனவும், இது தொடர்பாக இனிவரும் காலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கருத்துருக்களை பணியாளர்களின் பணிப்பதிவேடுகளுடன் தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment

LightBlog