TAPS - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் விரைவில் அமல்: அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, August 19, 2026

TAPS - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் விரைவில் அமல்: அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு




உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.


சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் கேள்விக்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது:


உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை, தி.மு.க ஆட்சி காலத்தில், ககன் தீப் சிங் பேடி தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்தவற்றில், முக்கியமான மூன்று விஷயங்களை, முதல்வர் விஜய் நடைமுறைப்படுத்துவார். கடைசி மாத ஊதியத்தில், 50 சதவீத தொகையானது, உத்தரவாதமான ஓய்வூதியமாக வழங்கப்படும். குழு பரிந்துரைத்துள்ள ஓய்வுகால பணப்பலன் தொகை வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள, குடும்ப ஓய்வூதியம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.


இதற்கிடையில், ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்காலத் தொகை வழங்கும் முறையை, ஏற்கனவே தொடங்கி விட்டோம்.


தற்போது, இதற்கான விதிகளை முறைப்படுத்தும் பணியும், செயல்பாட்டு வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணியும், தீவிரமாக நடந்து வருகின்றன. கூடிய விரைவில், இதற்கான நடைமுறைப்படுத்துதல் வழிமுறைகளும் கொண்டு வரப்படும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது, வரவிருக்கும் நாட்களில், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.


இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad