Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, August 11, 2026

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.


பொதுத்தேர்வுக்கு மாணவர்களை சிறப்பாக தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு பாடத்திற்கும் பாட நிபுணர்கள் மூலம் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று துவங்கிய இப்பயிற்சி, 17ம் தேதி வரை நடக்கிறது. அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 2,746 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.


பாடங்களின் சராசரி மதிப்பெண்களை உயர்த்தும் வழிமுறைகள், கடினமான பாடப்பகுதிகளை எளிமையாக கற்பிக்கும் நுட்பங்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற மாணவர்களுக்கு வழிகாட்டும் கற்பித்தல் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LightBlog