உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1, 2025 இல் வழங்கிய தீர்ப்பில் உள்ள பத்திகள் 192, 193, 194, 195, 196 ஆகியவற்றில் ஒருவர் வெளியில் இருந்து புதிதாகப் பணி நியமனம் பெறுவதும் ஏற்கனவே ஒரு துறையில் பணியாற்றுபவர் பதவி உயர்வு மூலம் அடுத்த நிலைப் பணி நியமனம் பெறுவதும் வேறுபட்டதல்ல. புதிதாகப் பணி நியமனம் பெறுவதும் பதவி உயர்வு மூலம் ஒருவர் பணியில் அமர்த்தப்படுவதும் ஒன்றுதான் என்று சொல்லப்பட்டுள்ளது.
பத்திகள் 192 முதல் 196 வரை சொல்லப்பட்டுள்ளவை
192.
It was contended that the term ‘appointment’ used in Section 23 of the RTE Act would mean only the initial appointment as a teacher and not
appointment by promotion. Accordingly, the minimum qualifications laid
down by the Council (including the TET) for ‘appointment of a teacher’
can only relate to ‘initial appointment’ of such teacher and not an appointment by ‘promotion’. Therefore, it was argued that the TET is not a mandatory requirement for promotion.
193.
We find ourselves in disagreement with this proposition.
194.
In legal parlance, the term ‘appointment’ means not only initial
appointment but also covers appointment by ‘promotion’, among others.
In this context, a profitable reference may be made to the decision of
this Court in M. Ramachandran v. Govind Ballabh81. Relevant
passage from such decision reads thus:
“6. … There is no dispute that appointment/recruitment to any
service can be made from different sources, i.e., by direct
appointment, by promotion or by absorption/transfer. The source of recruitment can either be internal or external.
Internal source would relate to cases where the appointments
are made by promotion or by transfer and by absorption.
External source would conceive the recruitment of eligible
persons who are not already in service in the organisation to
which the recruitment is to be made....”
195.
Furthermore, reference may be made to the decision of this Court in K.Narayanan vs. State of Karnataka82 where this Court traced the
meaning of the word ‘recruitment’ and held:
“6. … ‘Recruitment’ according to the dictionary means ‘enlist’.
It is a comprehensive term and includes any method provided
for inducting a person in public service. Appointment, selection,
promotion, deputation are all well-known methods of
recruitment. Even appointment by transfer is not unknown. ….”
196.
Appointment and recruitment are two distinct but not unrelated
concepts. Recruitment is the broader process of which selection is a part
that culminates in an appointment. Recruitment can be carried out from
various sources, which are broadly classified into internal and external
sources. Internal sources would comprise individuals who are already employed within the organization. This would include an appointment by
promotion or transfer. External sources, on the other hand, consist of
individuals who are not currently in the service of the recruiting
organization. Direct recruitment is an appointment from external
sources or from open market, so to say.
தீர்ப்பில் உள்ள விளக்கங்களின் அடிப்படையில் ஆராயும் போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டை பதவி உயர்வுக்கு கவனத்தில் கொள்ளக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பதவி உயர்வும் புதிய பணி நியமனம் போலவே கருதப்படவேண்டும். பதவி உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் நாளன்று உரிய கல்வித் தகுதிகளுடன் பணியாற்றும் அனைவரும் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் என்று கருதப்படவேண்டும்.
இந்நேர்வில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரண்படாத வகையில் பதவி உயர்வுக்குத் தகுதியுடையோர் பட்டியலை எவ்வாறு உருவாக்குவது?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 50 சதவீத பதவி உயர்வு மூலமும் 50 சதவீத காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 100% பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி அனுபவமும் வரையறுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பணியிடங்களையும் பணி நியமன விதிமுறையின் அடிப்படையில் நிரப்புவதற்கான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிப்ரவரி 11, 2011 இல் வெளியிட்ட அறிவிப்பில் (பத்தி 9) கூறப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்றுவதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.
*Qualifying marks*
9. A person who scores 60% or more in the TET exam will be considered as TET pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation policy;
(b) should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment.
மேற்கண்ட வழிகாட்டுதலில் உள்ள விதி 9 (a) ஐ பின்பற்றி TET தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
அடுத்ததாக, வழிகாட்டுதலில் உள்ள 9 (b) ஐ பின்பற்றி TET மதிப்பெண் அடிப்படையில் weightage முறைப்படி தகுதியுடையோர் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்கலாம். ஆனால், TET QUALIFYING MARKS அனைவருக்கும் ஒன்றாக இல்லாத நிலையில் மேற்கண்ட weightage முறையில் பதவி உயர்வுக்கான தரவரிசை பட்டியல் தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
இந்த சிக்கலை சரி செய்வதற்கு TET மதிப்பெண் அடிப்படையில் weightage கணக்கிடுவதற்குப் பதிலாக பணிக்காலம் (பணி அனுபவம்) மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்குவதே சரியாக அமையும். அனைத்து அரசுத் துறைகளிலும் இம்முறை தான் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் இயக்கங்கள், மேற்கண்ட ஆலோசனையை அரசுக்கு சொல்ல வேண்டும். நீதிமன்றத்திலும் இதை வலியுறுத்தும் வகையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இடை நுழைவு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
பதவி உயர்வு தொடர்பான வழக்குகளால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெறும் பதவி உயர்வு தடைபட்டுள்ளது. செப்டம்பர் 1, 2025 தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் புதிய வழக்குகள், தீர்ப்புகள், மேல்முறையீடுகள் தொடர்கின்றன. தீர்ப்புக்குப் பிறகு தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) பதவி உயர்வு தொடர்பாக எந்த வழிகாட்டுதலையும் வழங்காமல் இருப்பதே சிக்கல் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு தொடர்பாக கல்வி அதிகார அமைப்பு செயலற்ற நிலையில் இருப்பது கல்வி அமைப்பில் தேய்வுகள், சிக்கல்கள் ஏற்பட வழி வகுத்துள்ளது. குழந்தைகளின் கல்வி உரிமையும், நலனும் பாதிக்கப்படுகிறது. எனவே தற்போதைய வழக்கில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அமைப்பும் சேர்க்கப்படவேண்டும்.
சு. மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

No comments:
Post a Comment