Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, August 22, 2026

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான விடுப்பு விவரங்கள் ஒரே பக்கத்தில்...!




தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கியமான மற்றும் அவசியமான விடுப்பு விவரங்கள் கீழே ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான விடுப்புகள்

தற்செயல் விடுப்பு (Casual Leave - CL): 

ஒரு நாட்காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள்.

வரையறுக்கப்பட்ட விடுப்பு (Restricted Holiday - RH): 
ஒரு நாட்காட்டி ஆண்டிற்கு 3 நாட்கள்.

ஈட்டிய விடுப்பு (Earned Leave - EL):

ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு 17 நாட்கள்.
மொத்தம் கணக்கில் சேமிக்கக்கூடிய அதிகபட்ச நாட்கள்: 240 நாட்கள்.
ஈடு செய்யும் விடுப்பு: ஒரு வருடத்திற்கு 10 நாட்கள்.

ஒப்படைப்பு விடுப்பு (Surrender Leave):
வருடத்திற்கு ஒருமுறை 15 நாட்கள் அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 30 நாட்கள் ஒப்படைக்கலாம்.

மருத்துவ மற்றும் தனிப்பட்ட விடுப்புகள்

1. மருத்துவ விடுப்பு (Medical Leave - ML): 

பணிக்காலத்தின் அடிப்படையில் மருத்துவச் சான்றிதழின் பேரில் வழங்கப்படும் விடுப்பு நாட்கள்:
  • 2 முதல் 5 வருடம் பணி: 90 நாட்கள்
  • 5 முதல் 10 வருடம் பணி: 180 நாட்கள்
  • 10 முதல் 15 வருடம் பணி: 270 நாட்கள்
  • 15 முதல் 20 வருடம் பணி: 360 நாட்கள்
  • 20 வருடத்திற்கு மேல்: 540 நாட்கள்
2. சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு (UEL - Unearned Leave on Private Affairs): (தொடர்ச்சியாக 90 நாட்கள் மட்டுமே அனுமதி)

  • 0 முதல் 10 வருடம் பணி: 90 நாட்கள்
  • 10 வருடத்திற்கு மேல்: 180 நாட்கள்

3. புற்று நோய் சிகிச்சைக்கான விடுப்பு:
புற்று நோய்க்காக மருத்துவ விடுப்பு கோரும் போது தொடர்ச்சியாக விடுப்பு அனுமதி: 540 நாட்கள்.

புற்று நோய் சிகிச்சை (ஒவ்வொரு ஹீமோ மற்றும் ரேடியோதெரபி சிகிச்சையின் போது): 10 நாட்கள்.

மகப்பேறு மற்றும் குழந்தை நல விடுப்புகள்
  • மகப்பேறு விடுப்பு (Maternity Leave): முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் 365 நாட்கள் (ஒரு வருடம்).
  • தற்போது மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (அரசாணை வெளியிடப்படவில்லை)
  • தத்தெடுக்கும் விடுப்பு: 365 நாட்கள்.
  • கருச்சிதைவு விடுப்பு: 42 நாட்கள்.
  • சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave)

குடும்பநல அறுவை சிகிச்சைக்காக:
  • அரசு ஊழியரின் மனைவி அறுவை சிகிச்சை செய்தால் (பிரசவம் தவிர்த்து): 7 நாட்கள்.
  • ஆண் அரசு ஊழியர் அறுவை சிகிச்சை செய்தால்: 8 நாட்கள்.
  • பெண் அரசு ஊழியர் அறுவை சிகிச்சை செய்தால் (பிரசவம் தவிர்த்து): 20 நாட்கள்.
தொற்று நோய்களுக்கான விடுப்பு:
  • சின்னம்மை (Chickenpox): 7 நாட்கள்.
  • தட்டம்மை (Measles): 7 நாட்கள்.
  • பன்றிக்காய்ச்சல் (Swine Flu): 7 முதல் 10 நாட்கள்.
  • பிளேக் (Plague): 10 நாட்கள்.
  • ரேபிஸ் (Rabies): 10 நாட்கள்.

பிற:
  • தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க: வருடத்திற்கு 30 நாட்கள்.
  • பணியேற்பிடைக்காலம் (Joining Time)
  • பணியேற்பிடைக்காலம்: 7 நாட்கள்.
  • அனுபவிக்காத பணியேற்பிடைக்காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்தல்: 5 நாட்கள்.





No comments:

Post a Comment

LightBlog