தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்  (SIR) , 2002ம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் ஆவணங்கள் ஏதும் தேவையில்லை.
வாக்காளர் செய்ய வேண்டியது  BLO தரும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் இது போன்ற கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்.
அந்த படிவத்தில் என்ன கேட்கப்பட்டு இருக்கும்?
அந்த படிவம் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கும். வாக்காளர் பெற்றோர் வாக்காளர் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். தேவைப்படுபவர்கள் தங்களது புதிய புகைப்படத்தை ஒட்டி தரலாம்.
கேள்வி:- அந்த படிவத்தை பெறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் என்ன செய்வார்கள்?.
அந்த படிவத்தை பெற்றுக் கொண்டு அதில் உள்ள தகவலை சரி பார்த்து, அதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ள செயலியில் அவர்கள் பதிவேற்றம் செய்வார்கள் எளிதாக இந்த பணியை செய்ய 'கியூ.ஆர். கோடு வசதியும் உள்ளது. அந்த வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் சரி பார்க்கப்படும். அந்தாண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள், தங்களது பெற்றோரின் வாக்காளர் பட்டியலின் எண் மூலம் ஆய்வு செய்து இணைக்கப்படும்.

No comments:
Post a Comment