ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனிநபர் சார்பாக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன
வழக்கின் முக்கிய சாராம்சம் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு அளித்த தீர்ப்பாகும்
சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளித்துள்ளது
இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதி தீர்ப்பினை அளித்தது.
அதன்படி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2011 செப்டம்பரில் அமலுக்கு வந்தது. அன்று முதல் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்றும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் செப்டம்பர் 1 2025 அன்றிலிருந்து இரண்டு ஆண்டுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது
அவ்வாறு தகுதி பெறாத ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை விட்டு விலகிச் செல்லலாம் என்றும் தீர்ப்பளித்தது
இந்தத் தீர்ப்பை பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்த்த போதிலும் 2012 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக இந்த இரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இதை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
காரணம் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு சங்கங்கள் முன்னிறுத்தி போராட வில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
எனவே தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நியமனம் பெற வாய்ப்பு அளித்துள்ளது
அவ்வாறு தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெரும்பொழுது அவர்கள் தற்போது பெற்று வரும் குறைவான ஊதியம், ஊதிய முரண்பாடு களையப்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கூறும்பொழுது சுமார் 13 ஆண்டுகளாக தங்களுக்கு அளிக்கப்பட்ட வந்த அநீதி இந்த தீர்ப்பின் மூலம் களைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனை தாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறுகின்றனர்
இது ஒரு புறம் இருக்க மூத்த ஆசிரியர்கள் இதனை வரவேற்க வில்லை. காரணம் பல ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு இத்தீர்ப்பானது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அவர்கள் தற்போது தங்களுக்கு பின் பணியில் சேர்ந்த இளைய ஆசிரியர்கள் தலைமையின் கீழ் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment