”என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவனை எப்படி மோட்டிவேட் செய்வது” என்றொருவர் கேட்டிருக்கிறார்.
ஒன்பதாம் வகுப்பு என்றால் 14 வயது சிறுவன் என்று எடுத்துக் கொள்வோம்.
A.மோட்டிவேசன் முதல் செட்
1. முதலில் பையனிடம் ஒரு உரையாடல் நட்பை பெற்றோர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. உரையாடல் நட்பென்றால் அவர்களுக்கு என்ன விஷயம் பேச வேண்டும் என்றிருக்குமோ அதை நீங்கள் பேச வேண்டும். கேட்க வேண்டும்.
3. உதாரணமாக உங்கள் பையனுக்கு கிரிக்கட்டில் ஆர்வம் என்றால், கிரிக்கட் பற்றி நீங்களும் சுவாரஸ்யமாக பேசும் அளவுக்கு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி உங்கள் பையனுக்கு பிடித்த இரண்டு மூன்று சப்ஜெக்டுகளை “ஒக்கே நம்ம அம்மாகிட்ட சொன்னா கேப்பாங்க, நம்ம அப்பா கேப்பாங்க” என்று ஆர்வத்துடன் அவர்கள் பகிருமாறு ஒரு கனிந்த உரையாடல் மனிதராக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
4. உரையாடலில் உங்கள் பையன் அதிகம் பேச வேண்டும். நீங்கள் குறைவாக பேச வேண்டும்.
5. உரையாடலில் அட்வைஸ் செய்யக் கூடாது.
6. இந்த வயசுல இப்படித்தான் ஆர்வம் இருக்கும் அப்புறம் குறைஞ்சு போயிரும். நான் ஆடாத ஆட்டமா என்று டீன் ஏஜர்களிடம் சொல்லக் கூடாது.
7. உனக்கு மெச்சூரிட்டி பத்தாது வளர வளர நீயே தெரிஞ்சிப்ப என்று சொல்லக் கூடாது.
8. இதெல்லாம் நல்லா பேசுற... ஆனா படிக்க மட்டும் சோம்பேறியா இருக்க... இப்படி சொல்லக் கூடாது.
9. டீன் ஏஜர்களிடம் உரையாடும் போது அவமானத்துக்கு ரெடியாக இருக்க வேண்டும். திடீரென்று நீங்கள் பேசுவதை கேட்காமல் எழுந்து போவார்கள். போம்மா அந்தாண்ட என்பார்கள். அந்த அவமானத்துக்கு அஞ்ச கூடாது.
10. இப்படி ஒரு நல்ல நண்பனாக உங்கள் மகளிடத்தில், மகனிடத்தில் உரையாட முடிந்தால் மட்டுமே அவர்களை உங்களால் கண்ரோலும் செய்ய முடியும். ஆகவே உரையாடும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்
B. மோட்டிவேசன் இரண்டாம் செட்
1. வீட்டில் ஒயிட் போர்டும் மார்க்கர்களும், ஒரு டஸ்டரும் குறைந்தது இரண்டு அறைகளிலாவது இருக்க வேண்டும். மீடியம் சைஸ் போர்ட் போதும்.
2. ஹாலில் ஒரு சார்ட் பேப்பரை ஒட்டி இருக்க வேண்டும். அதில் எதுவும் எழுதி இருக்க கூடாது. வெள்ளையாக இருக்க வேண்டும்.
3. உங்கள் மகன் தூங்கும் தனியறை பெட்ரூமிலோ, அல்லது பொதுஅறை பெட்ரூமிலோ ஒரு எழுதப்படாத சார்ட் ஒட்டி இருக்க வேண்டும்.
4. நினைத்தால் அடுத்த விநாடியே எடுக்க கூடிய அளவுக்கு சிறு சிறு நோட்டுகள் மற்றும் பேனாக்கள்.
மோட்டிவேசன் மூன்றாம் செட்:
1. வீட்டில் அறிவு தகவல்கள் என்ற வாசனை பத்தியை ஏற்றி வையுங்கள்.
2. ஒரு இண்டலக்டுசுவல் அட்மாஸ்பியரை வீட்டில் கொண்டு வாருங்கள். இதை செய்வது எளிது.
3. கூகிள் பார்த்து அவ்வப்போது அந்த நாள் பிறந்த விஞ்ஞானிகள் பற்றிய தகவலை சொல்லுங்கள்.
4. மைக்கேல் பாரடே முதன் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்போ... அதான் ஒரு மேக்னட் பீல்ட்ல ஒரு காயிலை மூவ் பண்ணி அதுல மின்சாரம் வருதுன்னு கண்டுபிடிச்சப்போ மக்கள் அவங்ககிட்ட கேட்டாங்க
”இதனால என்ன யூஸ்”.
அதுக்கு பாரடே சிரிச்சிட்டு “ என்னய்யா நீங்க இப்பதான் மின்சாரங்கிற குழந்தை பிறந்து கையில எடுத்திருக்கிறோம். என்ன யூஸ்னு கேக்குறீங்க. இது வளர்ந்தா தெரியும் பாரு யூஸ்” அப்படி சொன்னாராம்.
இப்ப பாரு நான் போயி ஸ்விட்ச் போடுறேன் மின்சாரத்துல பேன் ஓடுது ( ஓடிப்போய் போடுங்கள்) மறுபடி ஓடிப் போய் ஸ்விட்ச் போட்டாக்க லைட் எரியுது... பார் பார் மின்சாரத்தோடு யூஸ் பார்.
இப்படி சொல்லும் போது உங்கள் பையன் நிச்சயம் இதைப் பார்த்து சிரிப்பான்.
5. ஒரு காயினை சுண்டிவிட்டா பூ விழுமா தலை விழுமா... ரெண்டு விழுறதுக்கும் 50 / 50 சான்ஸ் இருக்கு அப்படித்தான...Buffon அப்படின்னு விஞ்ஞானி என்ன செய்தாரு மொத்தம் 4040 முறை ஒரு காயினை சுண்டிவிட்டாரு...
அவருக்கு அதுல 2048 முறை ஹெட் விழுந்துச்சு, 1992 தடவை அது டெயில் விழுந்துச்சு... பாரு ஒரு சின்ன காயினை வைச்சி அவர் ஒரு எக்ஸ்பெரிமெண்ட் செய்திருக்கார் பாரு...
இது போல முப்பது விநாடிக்குள்ளான தகவல்களை சொல்லி சொல்லி உங்கள் வீட்டை ஒரு “அறிவுப்பூர்வமாக பேசும் இடம்” என்ற உணர்வை உங்கள் பையனுக்கு ஏற்படுத்த வேண்டும்.
ஒரூ டீன் ஏஜரை படிப்பில் உயிரோட்டமாக மோட்டிவேட் செய்ய இந்த மூன்று மோட்டிவேசன் செட்களும் முன் தயாரிப்புகளும் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும்.
மோட்டிவேசன் நான்காம் செட்:
1. படிப்பதற்கான நம்பிக்கையை உருவாக்குங்கள். உங்கள் பையனை அழைத்து பத்து நிமிசம் அம்மா கூட உக்காரு என்று கனிவோடு அமர வைத்து “ சரி இதப் பாரு இந்த வருசம் நீ சயின்ஸ்ல என்ன என்ன படிக்க போற ... மொத்தம் 12 பாடம் சரியா... அதுல இது இது இது பிசிக்ஸ்,,, இது இது கெமிஸ்டரி... இது இது பயாலஜி...
பிசிக்ஸ்ல முதல் பாடம் லைட் பத்தி படிக்க போற, ரெண்டாவது Sound... மூணாவது Gravitation... என்று ஒவ்வொரு பாடம் பற்றியும் குட்டியாக ஒரு விளக்கம் கொடுங்கள். 1 , 2, 3 ... என்று 12 வரை போர்டில் எழுதி ஒவ்வொரு பாட தலைப்பையும் சுருக்கமாக எழுதுங்கள்.
2. அவ்வளவுதான் டியர் இந்த 12 பாடத்தையும் உன்கிட்ட இன்ரோ கொடுக்கிறதுக்குதான் உன்ன கூப்பிட்டேன். பத்து நிமிசம் ஆகிடுச்சு பாரு... இப்படி அறிமுகப்படுத்தலாம்.
3. இப்படி ஒரு பாடப்புத்தகத்தை மொத்தமாக அறிமுகப்படுத்துதான் மோட்டிவேசனின் ஆரம்ப நிலை.
4. இப்படி அறிமுகப்படுத்தும் போது உங்கள் பையன் அதை கவனிக்காமல் இருந்தால் “டேய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கத்திவிடக் கூடாது. பொறுமை பொறுமை பொறுமை... மிக பொறுமையாக செய்ய வேண்டிய விஷயம் இது.
5. இதை செய்த பிறகு ஒவ்வொரு பாடத்தில் இருக்கும் Black Bold Heading ஐ இதே போல அறிமுகப்படுத்த வேண்டும்.
6. ”அதன் பிறகு நீ வா... சும்மா நாம ரெண்டு பேரும் இந்த பாடத்தை சேர்ந்து வாசிப்போம். எதுவும் புரிய வேண்டாம். சும்மா வாசிப்போம். சரியா.. இந்த பாடத்துல 30 பக்கம்... இப்போ ஜஸ்ட் மூணு பக்கம் வாசிப்போம்” என்று நீங்கள் ஒரு பேரா படித்து அவனை ஒரு பேரா படிக்கவிட்டு வாசிக்கலாம்.
7. இப்படி செய்யும் போது உங்கள் பையனுக்கும் படிப்புக்கும் அவனையறியாமல் ஒரு கனெக்சன் போட்டு விடுகிறீர்கள்.
8. அடுத்து அறிவியல் பாடத்தில் உள்ள Activites அனைத்தையும் பையனிடம் பேசுங்கள். இதுல பாரு இந்த பாடத்துல முதல் ஆக்டிவிட்டி என்ன போட்டிருக்காங்க பாரு. 100 மில்லி நீரை எடுத்துகிட்டு அதுல ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை போட்டு கரைக்கனுமாம். இப்ப நம்ம கண்ணுக்கு அந்த நீரோட மட்டம் ஒசந்திருக்குமா... அல்லது அதே இடத்துல இருக்குமா... உனக்கு என்ன தோணுது... இப்படி தமிழில் சாதரண மொழியில் கேட்டால் டீன் ஏஜர்கள் எளிதில் கல்வி வலையில் மாட்டுவார்கள்.
9. இப்படி அறிவியல் பாடத்தில் இருக்கும் ஆக்விட்டீக்களை அனைத்தையும் நீங்கள் படித்து அதை பையனுக்கு சொல்லிக் கொடுங்கள். ஒரு வகுப்பு 25 நிமிடத்தை தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
10. அடுத்து உங்கள் பையனுக்கு மனப்பாடம் செய்யும் அழகை சொல்லிக் கொடுங்கள். ஒரு நல்ல தியரி கேள்வி பதிலை எடுத்து, அதை பத்து பாயிண்டுகளாக மாற்றிக் கொள்ளுங்கள்.
11. வா இந்த கொஸ்டியனை நாம கதற கதற படிப்போம்... என்று சொல்லி முதல் பாயிண்டை வாசியுங்கள். அதை அவனை ரிப்பீட் பண்ண சொல்லுங்கள். பிறகு கண்ணை மூடி ரிப்பீட் செய்ய சொல்லுங்கள். அடுத்து இரண்டாம் பாயிண்ட்... அதை ரிப்பீட்... பிறகு கண்ணை மூடி ரிப்பீட்... இப்போது முதல் இரண்டு பாயிண்டுகளை சொல்ல சொல்லுங்கள். அடுத்தது மூன்றாவது பாயிண்ட் .. இப்போது முதல் இரண்டாவது மூன்றாவது... இப்படி பத்து பாயிண்டுகளையும் கதற கதற படிப்பது. இதை படிக்கும் போது டீன் ஏஜர்கள் இதை ஆர்வமுடன் செய்ய மாட்டார்கள் என்று நினைப்பீர்கள். அப்படி இல்லை. இப்படி கதற கதற மனப்பாடம் செய்யும் விஷயத்தை நீங்கள் ஆரம்பித்தால் அவர்கள் உங்களோடு சேர்ந்து இதை வெறித்தனமாக செய்வார்கள். ஒரே ஒரு செட் மனப்பாடம் முடிந்த உடன் அதோ விட்டு விடுங்கள். இப்போது உங்கள் பையன் மனப்பாடம் செய்யும் கலையை கற்றுவிட்டார்.
12. அடுத்து உற்று கான்சென்ரேட் செய்வது... “அம்மா ஒரு புக் எடுத்து பத்து நிமிசம் உத்து படிப்பேன். நீயும் பத்து நிமிசம் வேற எந்த டைவேர்சனும் இல்லாம உத்து படிக்கனும் சரியா... ஸ்டாப் வாட்ச் வைச்சுக்கலாம்” என்று பத்தே பத்து நிமிடம் எந்த திசை திருப்பலும் இல்லாமல் புத்தகம் முன்னாடி அமர வையுங்கள். படிக்காமல் சும்மா பொம்மை பார்த்தாலும் பரவாயில்லை. பத்து நிமிடம்... பிறகு பத்து நிமிடத்தை 15 ஆக அதிகரித்து , இருபதாக அதிகரித்து விடுங்கள். இருபதை தாண்டி இதை கொண்டு போகக்கூடாது.
இப்படி எல்லாம் செய்தால் உங்கள் பையன் ஆட்டோமெட்டிக்காக படிக்க ஆரம்பித்து விடுவான்.
நீங்கள் செய்யக் கூடாதவை
1. செண்டிமெண்டாக நீளமாக பேசக் கூடாது.
2. நீ படிச்சுதான் குடும்பம் தழைக்கனும் இப்படி எல்லாம் சொல்லக் கூடாது.
3. உங்கள் மூட் ஸ்விங்கை டீன் ஏஜர்கள் மேல் காட்டக்கூடாது.
4. அதிக தன்மானம் பார்க்ககூடாது. டீன் ஏஜர்களை படிக்க வைப்பதில் அவமானம் சாதரணமாக நடக்கும்.
இப்படி எல்லாம் செய்தால் நிச்சயம் உங்கள் பையன் சிறப்பாக படிப்பான்.
No comments:
Post a Comment