தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மாலை 4 முதல் இரவு 7 மணிவரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார். இதில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment