கல்வி நிறுவனங்களில் யார் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் ? பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை - Asiriyar.Net

Thursday, September 18, 2025

கல்வி நிறுவனங்களில் யார் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் ? பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை

 




'அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, தலைமைஆசிரியர்களே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


தமிழக பள்ளிகள், கல்லுா ரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று கட்டாயமாக தேசியக்கொடி ஏற்ற வேண்டும். அரசு பள்ளிகளை பொருத் தவரை ஒவ்வொரு ஆண்டும் தலைமையாசிரியர்கள் தேசியக்கொடி ஏற்றுவர்.


ஆனால், பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டதில் இருந்து, தேசியக்கொடியை ஏற்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் போட்டி போடுகின்றனர். இது சம்பந்தமாக பல இடங்களில் பிரச்னையும் எழுந்தது.


இந்நிலையில், 'தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் மரபுகளின் படி, பள்ளிகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தலைமையாசிரியர் அல்லது முதல்வர் ஏற்ற வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் தேசிய கீதம் பாடி, மரியாதை செலுத்த வேண்டும்' என அரசு உத்தர விட்டுள்ளது.


இது தொடர்பான வழிகாட்டுதல்களை தவறாது கடைப்பிடிக்கும்படி, அனைத்து அரசு, நகராட்சி, நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad