ஏமாற்றப்படும் EPF ஓய்வூதியதாரர்கள் - மத்திய அரசு கடிதத்தில் வெளிவந்த உண்மைகள்! - Asiriyar.Net

Tuesday, September 16, 2025

ஏமாற்றப்படும் EPF ஓய்வூதியதாரர்கள் - மத்திய அரசு கடிதத்தில் வெளிவந்த உண்மைகள்!

 



EPF நிதி பற்றியும் ஓய்வூதியம் பற்றியும் CPIM ஜான் பிரிட்டாஸ் எம்.பி பாராளுமன்ற மேலவையில் கேட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் பதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக, அரசால் ஈ.பி.எஃப் (EPF) ஓய்வூதியதாரர்கள் மீது கடுமையான சுரண்டல் நடத்தப்படுவதை வெளிப்படுத்துகிறது.


கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடி ஓய்வூதிய நிதி கருவூலத்தில் இருந்தும், 96% க்கும் மேற்பட்ட ஈ.பி.எஃப் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ. 4,000 க்கும் குறைவாகவே ஓய்வூதியம் கிடைக்கிறது


எம்.பி. டாக்டர் ஜான் பிரிட்டஸ் எழுப்பிய கேள்விக்கு இன்று மாநிலங்களவையில் கூட்டணி அரசு அளித்த பதிலில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்த பதிலில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 81,48,490 EPF ஓய்வூதியதாரர்களில், 

₹1500க்கும்குறைவாக ஓய்வூதியம் பெறுவோர்

49.15லட்சம் பேர்.


₹1500முதல்₹4000வரை ஓய்வூதியம் பெறுவோர்

29.5456 லட்சம் பேர்.


₹4000முதல் ₹6000வரைஓய்வூதியம் பெறுவோர்

2.7893 லட்சம் பேர்.


₹6000 க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் 

0.53541லட்சம்.


மார்ச் 2025 நிலவரப்படி, ஊழியர்கள் ஓய்வூதிய நிதிக் கருவூலம் ரூ. 9.93 லட்சம் கோடியாக வீங்கியிருந்தாலும் கூட இந்த உண்மை வெளியாகியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு மட்டும், ஓய்வூதிய நிதியானது ரூ. 58,668.73 கோடி வட்டி வருமானமும், ரூ. 863.62 கோடி தண்டனை/பிற வருமானமும் ஈட்டி, மொத்தம் ரூ. 59,532.35 கோடி சேர்த்தது. இதனை ஒப்பிடும்போது, அதே ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த ஓய்வூதிய மற்றும் ஓய்வு நலன்களின் தொகை வெறும் ரூ. 23,027.93 கோடியாகும் – அந்த காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வட்டி வருமானத்தின் பாதியை விடக்கூட குறைவான தொகை இதுவாகும். "செயல்படாத கணக்குகளில்" ரூ. 10,898.07 கோடி பயனில்லாமல் கிடக்கிறது என்பதும் இப்பதிலில் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad