மாணவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் - அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் அரங்கேறிய கொடூரம்! - Asiriyar.Net

Tuesday, September 23, 2025

மாணவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் - அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் அரங்கேறிய கொடூரம்!

 




உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தித் தாக்கிய காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியில் அரசு கள்ளர் பள்ளி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI)பள்ளியில் பயிலும் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கிப் பயின்று வருகின்றனர்.


உசிலம்பட்டி மாணவர் விடுதி

இந்த நிலையில் பள்ளியில் படிக்க முடியாமல் இடையில் வகுப்பை நிறுத்திய மாணவர்கள் சிலரை செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கடந்த 11ஆம் தேதி புதிதாகத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன முதல்வர் சேர்த்துள்ளார்.,இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்,தேனி மாவட்டம் மயிலாடும் பாறை,கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர்,மதுரை அச்சம்பத்துப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் பரிந்துரையின் பேரில் செக்கானூரணி அரசு மாணவர் விடுதியில் உள்ள ஒரே அறையில் தங்கிப் பயின்று வருகின்றனர்.


அரசு விடுதியில் மாணவர் தாக்குதல்

இந்த நிலையில் இந்த மாணவர்களில் ஒருவரைச் சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி கேலி கிண்டல் செய்து அடிப்பதை அறையில் இருந்த மாணவன் தனது செல்போனில் காணொளியாகப் பதிவிட்டு அதைப் பாதிக்கப்பட்ட மாணவன் தந்தையிடம் காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும் இந்த காணொளி சமூக வலைத்தளத்திலும் விரைவானது.இந்த காணொளி விரைவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காணொளி தொடர்பாக விடுதி பாதுகாவலர் பாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


காவல் நிலையத்தில் புகார்

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் செக்கானூரணி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவனைச் சக மாணவர்கள் அவரது ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி ராக்கிங் தடுப்புச்செய்ததாகவும் தெரியவந்தது.


மாணவர் நிர்வாண வீடியோ வைரல்

இதனை அடுத்து தேனி மாவட்டம் கோட்டூர்,மதுரை அச்சம்பத்து மற்றும் வில்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிய தேனி மாவட்டம் மயிலாடும் பாறையைச் சேர்ந்த மாணவன் உட்பட நான்கு சிறார்கள் மீது உடன் பயின்ற மாணவனைக் கேலி கிண்டல் செய்து தாக்கியதால் ராக்கிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அரசு விடுதி மாணவர் பிரச்சனை

இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் தங்கிய சக மாணவனைக் கேலி, கிண்டல் செய்த தாக்கிய காணொளி வைரலானதை தொடர்ந்து விடுதி பாதுகாவலர் பாலமுருகன் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக கூறியவரைக் கல்வி அதிகாரிகள் இடைநீக்கம் செய்தனர்.மேலும் தற்காலிகமாக சுபாகரன் என்பவரை விடுதி பொறுப்பு பாதுகாவலராக நியமித்துள்ளனர்.அரசு மாணவர்கள் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி ராக்கிங் தடுப்புச் செய்த காணொளி வைரலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற ராகிங்கில் ஈடுப்படால் கடும் நடவடிக்கைப் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad