TET தகுதித் தேர்வுக்கு பயந்து விபரீதம் - அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் தற்கொலை - Asiriyar.Net

Saturday, September 20, 2025

TET தகுதித் தேர்வுக்கு பயந்து விபரீதம் - அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் தற்கொலை

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இ.பி.காலனியை வத்தலக்குண்டு, சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). இவரது மனைவி ஷிபா.இவர், அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், பன்னீர்செல்வமும் அரசு பள்ளியில் ஆசிரியர் ஆவதற்காக தகுதித்தேர்வு எழுதி வந்தார். கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதவிண்ணப் பித்துள்ளார். 


மேலும் அதற்காக தயாராகி வந்தார். இருப்பினும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் மேல்மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற பன்னீர்செல்வம் தூக்குப்போட்டு சோ தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து ஷிபா  மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 


இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ் பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment

Post Top Ad