ஆசிரியர் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குலசேகரபாண்டியன், செயலாளர் கனகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தனர்.
\
டெட் தேர்வு சம்மந்தமாக தமிழக அரசு உடனே தலையீடு செய்து ஆசிரியர் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வலி யுறுத்தியும், அரசாணை எண் 243 ரத்து செய்ய கோரியும் உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு நல்லாசிரியர் விருது பெற்ற ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி,பணி நிறைவு பெற்ற பெருமாள் தேவன்பட்டி தலைமை ஆசிரியர் சுந்தர், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட ஏ.தரைக்குடி, இடையன்குளம், இக்பால் பள்ளி ஆசிரியருக்கும் பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் இஞ்ஞாசிமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment