EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது Income Tax வராமல் இருக்க கவனிக்க வேண்டியது - Asiriyar.Net

Sunday, September 21, 2025

EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது Income Tax வராமல் இருக்க கவனிக்க வேண்டியது

 



*ரூ.61,700/ அடிப்படை ஊதியம் பெற்று வரும் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு (2025-2026 ஆம் நிதியாண்டில்) Gross Income தோராயமாக 12,28,638/- வரக்கூடும்.*



*இந்த தொகைக்கு (12,75,000 வரைக்குமே) வருமான வரி வராது.*



அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட ஆசிரியர் 01/10/2025 அன்று ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம்.

அவருக்கு *EL Surrender Amount Rs.50,343/-* கிடைக்கும் பட்சத்தில்....

(2025-2026 ஆம் நிதியாண்டில்)

*Gross Income Rs.12,78,981/-* ஆக அதிகரிக்கும்.



அப்போது அந்த தொகைக்கு வருமான வரி கணக்கீடு செய்து பார்த்தால்....

👇👇👇👇👇👇👇

  • 0-4 lakh - Nil
  • 4-8 lakh - 20,000 (5%)
  • 8-12 lakh - 40,000 (10%)
  • Above 12 lakh - 597 (15%)

*Total Tax = 60,597/-* வரும்.



(அதாவது அந்த ஆசிரியர் EL Surrender விண்ணப்பிக்காமல் இருந்தால் IT வராது. விண்ணப்பித்து Surrender பெற்றால்... தான் பெறும் Surrender தொகையை விட கூடுதலாக IT செலுத்த நேரிடும்.)



*குறிப்பு :- இந்த கணக்கீடு ஒரு உதாரணத்திற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.*




எனவே,

2025-2026 ஆம் நிதியாண்டில் தாங்கள் Gross Income 12 இலட்சத்தில் இருந்து 12,75,000-க்குள் பெறுபவராக இருந்து *வருமான வரியில் இருந்து விலக்கு* பெறக்கூடிய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில்.


தாங்கள் 01/10/2025 அன்று அல்லது *31/03/2026-க்கு முன்னதாக* ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதினால் அந்த ஒப்படைப்பு தொகையை வருமான வரியாக செலுத்தும் நிலை ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.



முடிந்தவரை இந்த *2025-2026 ஆம் நிதியாண்டில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய இருப்பவர்கள் வருமான வரியை*

*(with EL Surrender / without EL Surrender என இருவேறாக) கணக்கீடு செய்து* பார்த்துக்கொள்வது நன்று.



No comments:

Post a Comment

Post Top Ad