தீபாவளிக்கு முன்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மனதை குளிர் விக்கும் விதமாக இரண்டு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 1.2 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தில் (DR) 3% உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
அறிவிப்பு 1 - அகவிலைப்படி உயர்வு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கடந்த வாரம் பல ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கியதுடன், வரி விதிப்புப் பிரிவுகளையும் முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. செப்டம்பர் 22, 2025 முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.
இந்த அறிவிப்பு மூலம் பல பொருட்கள் ஜீரோ ஜிஎஸ்டி வரிக்கு கீழ் வந்துள்ளன.அதாவது முன்பு 5% - 12% வரிகள் விதிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பல வருட கோரிக்கையை பாஜக நிறைவேற்றி உள்ளது. தீபாவளி பரிசாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியாக உள்ளது.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு
வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வெளியிடப்படும் இந்த அறிவிப்பு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம். இந்த உயர்விற்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 55% லிருந்து 58% ஆக உயரும். இந்த அதிகரிப்பு ஜூலை 2025 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும், மேலும் அக்டோபர் மாத ஊதியத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகை வழங்கப்படும்.
மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை திருத்துகிறது. முதல் திருத்தம் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி-ஜூன் காலத்திற்கும், இரண்டாவது திருத்தம் தீபாவளியையொட்டி ஜூலை-டிசம்பர் காலத்திற்கும் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20-21 தேதிகளில் வருவதால், அகவிலைப்படி உயர்வை தீபாவளி பரிசாக அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு, மோடி அரசு அக்டோபர் 16 அன்று, தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி கணக்கீடு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
7வது ஊதியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதிகளின் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. இதில், தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) 12 மாத சராசரி கணக்கில் கொள்ளப்படுகிறது. ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான சராசரி 143.6 ஆக இருந்தது. இதன் அடிப்படையில், அகவிலைப்படி 58% ஆக வருகிறது. அதாவது, ஜூலை-டிசம்பர் 2025 க்கு, அகவிலைப்படி 55% லிருந்து 58% ஆக உயரும்.
ஊதிய மற்றும் ஓய்வூதிய உதாரணங்கள் மூலம், ஊழியர்கள் மாதந்தோறும் எவ்வளவு கூடுதலாக பெறுவார்கள் என்பதை அறியலாம். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ₹18,000 (7வது CPC படி குறைந்தபட்ச அடிப்படை) எனில், பழைய அகவிலைப்படியின்படி (55%) ₹9,900 கிடைத்தது. புதிய அகவிலைப்படியின்படி (58%) இது ₹10,440 ஆக இருக்கும். அதாவது, மாதத்திற்கு சுமார் ₹540 கூடுதலாக கிடைக்கும்.
புதிய சம்பளம் எவ்வளவு?
மறுபுறம், ஒருவரின் அடிப்படை ஓய்வூதியம் ₹20,000 ஆக இருந்தால், சுமார் ₹600 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு முழுமையாக CPI-IW தரவுகளின் அடிப்படையிலானது. இந்த அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் நடைபெறும் கடைசி உயர்வு என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8வது ஊதியக் குழு செயல்முறையை அரசு எவ்வாறு விரைவுபடுத்துகிறது என்பதில் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது.
அறிவிப்பு 2 - மகளிர் உரிமை தொகை:
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. தீபாவளி பரிசாக இவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
மகளிர் உரிமை தொகை
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைகின்றன. எனவே, முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 28 முதல் பதில்களைப் பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கான பதில்கள் அனுப்பப்படவில்லை. எனவே இவர்கள் பெரும்பாலும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக பதிலகளாய் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment