தமிழக அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு:
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.
14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது-அமுதா ஐஏஎஸ்.
No comments:
Post a Comment