மூத்த ஆசிரியர்களைத் டெட் தேர்வு எழுத வைப்பது தீர்வல்ல
* 50 வயதை கடந்த ஒரு மூத்த ஆசிரியராக என்னுடைய கருத்து..
* சங்கங்களை குறை சொல்லி நம்மிடையே பிளவை ஏற்படுத்துவது சரியல்ல...
* கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைவருக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
* பணியில் இருப்பதற்கு தேவையில்லை மற்றும் பதவி உயர்வுகளுக்கு தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்த ஒரே காரணத்தினால் கிடைத்த தீர்ப்பு இது
* மாண்புமிகு நீதியரசர் டி கிருஷ்ணகுமார் ரிட் பெட்டிஷனில் அளித்த தீர்ப்பையே உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது..
* 50 வயதை கடந்த ஒரு மூத்த ஆசிரியராக என்னுடைய கருத்து
*55 வயதிற்கு மேல் சங்கத்தை நடத்தும் எந்த ஆசிரியருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை..
* அவர்கள் யாவரும் அரசாங்கத்திற்கு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப் போகின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை....
* ஆசிரியர்கள் அனைவரையும் தேர்வு எழுத வைப்பது என்பது அவர்களுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்....
* ஏனெனில் என்னதான் செய்தாலும் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது என்பது மிகக் கடினம்...
* அதற்கு பதிலாக பணியில் தொடர்வதற்க் விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஒன்றே நிரந்தர தீர்வு..
* உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இதில் அடங்கியுள்ளது மத்திய அரசு அனைத்தையும் கண்காணிக்கும் என்சிடி ஆனது அனைத்தையும் கண்காணிக்கும் , இச்சமயத்தில் ஒரு ஆசிரியர் வாட்ஸ் அப்பில் கீழ்க்கண்டவாறு பதிவிடுகிறார் வினாவை அ_ மா என்று கேட்டுவிட்டு..... நாங்கள் பதில் அம்மா என்றாலும் அம்மம்மா என்றாலும் இரண்டும் சரியே என்றும் மாணவர் எழுத முயற்சிக்கின்றார் அதனால் அம்மாவும் சரி அம்மம்மாவும் சரி என்று நாங்கள் பதிலை செட் செய்வோம் என்று சொல்கிறார்.... மற்றொருவர் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்ற கேள்விகள் இடம் பெறும் என்கின்றார்?
* என்ன முட்டாள் தனமான இருக்கின்றது உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாணவரின் கல்வி நலனை காக்க பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி கல்வியின் தரத்தை பேணுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வின் தரத்தை பேணுவதும் போன்ற பல முக்கிய காரணங்களை உச்ச நீதிமன்றம் விவரித்துள்ளது..
* வினாத்தாள் ஆனது இவ்வாறு கேட்கப்பட்டால் வினாத்தாளின் தரத்தை என்சிடிவி உச்சநீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றால் தேர்வின் கதி என்னவாகும்....
* நம்முடைய மூத்த ஆசிரியர்கள் ஏன் இதை புரிந்து கொள்ளவில்லை
* மதிப்பெண்களை குறைத்து விடலாம் என்றும் அரசுக்கு யோசனை சொல்கின்றனர் ..
* மதிப்பெண்ணில் 5% விலக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே...
* பிற மாநிலங்களில் மதிப்பெண்ணை குறைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டும் அவர்கள் தமிழ்நாட்டின் கல்வி நிலையானது இந்தியாவிலேயே முதன்மையானது என்பதை மார்த்தட்டி கொள்ளும் நாம் இதை எவ்வாறு கேட்க முடியும்...
.
* வெளியில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான டி ஈ டி ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருக்கையில் மதிப்பெண்களை குறைப்பது எவ்வாறு சாத்தியம்?
* தமிழக அரசு கடைசியாக அறிவித்த அறிவிப்பானையில் எஸ்டி பிரிவினருக்கு மதிப்பெண்களை குறைத்துள்ளது அதற்கான காரணம் எஸ்டி பிரிவில் அதிகமானவர்கள் தேர்ச்சி பெறாமல் இருப்பது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* மற்ற பிரிவினருக்கு அதிகமான லட்சக்கணக்கானவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கும் போது மதிப்பெண்ணை எவ்வாறு குறைக்க இயலும்? இது சாத்தியமா?
* பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதிய பிறகு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைகின்றனர்...
* அதற்காக 35 சதவீத மதிப்பெண் என்பதை 20% என்று அரசு நியமித்துக் கொள்ளலாம் அல்லவா....
* இது மாணவர்களுக்கு நன்மையே விளைவிக்கும் அல்லவா ஆனால் ஏன் அவ்வாறு செய்வதில்லை
* எந்த ஒரு தேர்விற்கும் தரம் என்று உள்ளது குறைந்தபட்ச மதிப்பெண் என்று உள்ளது அதை எவரும் மாற்ற முடியாது..
...
* பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பிலும் கணித தேர்வு எப்போதுமே கடினமாக வந்துள்ளது நம் மாணவர்கள்தானே எழுதுகின்றனர் நம் ஆசிரியர்கள்தானே தயாரிக்கின்றனர் ஏன் அனைத்து மாணவர்களும் தேர்வு தேர்ச்சி பெறும் வகையில் வினாத்தாள் எப்போதும் எளிமையாக இருப்பதில்லை சில நேரங்களில் மிக கடுமையாக கூட வந்து விடுகின்றன ஏன்.....?
* ஏனெனில் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் தரம் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
* பத்தாம் வகுப்பில் கூட கூட்டு வரிசை கணக்கை மாணவர்களுக்கு கொடுக்காமல் 1+1 = ? போன்ற வினாக்கள் தரப்படலாம் அல்லவா?
* ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியே Learning outcomes பற்றி உண்டு என்பது உங்களுக்கு தெரியாததா?
* ஏன் அவ்வாறு செய்யப்படுவதில்லை...
* உச்சநீதிமன்றம் மற்றும் என்சிட்டி போன்ற அமைப்புக்கள் தரத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள நிலையில் கேள்வித்தாளின் தரத்தை குறைத்தமேயானால் கேள்வித்தாளானது உச்ச நீதிமன்றத்தில் அதற்குறிய தரத்தை பற்றிய வழக்கு தொடரப்பட்டால் தேர்வின் கதி என்ன ஆகும் ?
*
* தரத்தையும் மதிப்பெண்னையுயும் குறைப்பது தீர்வா? அல்லது பணியில் இருப்பதற்கே டிஇடி விலக்கு கேட்பது தீர்வா?
* நம் மாநிலத்தில் ஏற்கனவே கணினி ஆசிரியர்கள் 800 பேர் மூன்று தேர்வுகளுக்கு பிறகு வேலையை விட்டு சென்றுள்ளனர்...
* இந்த காரணிகள் அனைத்தையும் விட்டு விடுவோம்... இவ்வாறு தேர்வு வைத்து விட்டு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நீங்கள் என்ன செய்வீர்கள் இரண்டு வருடத்திற்கு பிறகு....
* 50 வயது கடந்த என்னைப் போன்ற பெண் ஆசிரியர்களுக்கு என்ன செய்வது என்பது புரியவில்லை..
* தேர்வு வைக்கவும் எளிமையாக கேட்போம் மதிப்பெண்ணை குறைப்போம் போன்ற தேவையற்ற வாதங்கள் எல்லாம் தேவையில்லாதது....
* பணியில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கும் வினாத்தாளை மிக எளிய எளிமையாக அமைத்தால் வெளியே மிக கடுமையான தேர்வை எழுதி பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், லட்சக்கணக்கான பேர் படித்துவிட்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் இந்த அரசுக்கு எதிராக திரும்பமாட்டனரா? இதை அரசு விரும்புமா? பணியில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமா அல்லது பணிக்காக காத்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா?
* 82 மதிப்பெண்கள் கடுமையான வினாத்தாளில் எடுத்து பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் மதிப்பெண்களை குறைத்தால், அவர்கள் வழக்கிற்கு செல்லமாட்டார்களா?
* உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் தொடர்வதற்கு விலக்கு கேட்பதே சாலச் சிறந்தது.....
* இந்தியாவில் நாம் தமிழ்நாடுக்கு மட்டும் தான் இந்த நிலைமையா மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆசிரியர்கள் இல்லையா அவர்கள் தேர்ச்சி பெறாமல் பணியில் இல்லையா?
* மற்ற மாநிலங்களும் கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவே முயற்சி செய்வார்
* அவர்களுடன் நாமும் சேர்ந்து பணியில் இருப்பதற்கு டெட் தேர்ச்சியில் இருந்து விலக்கு கேட்பது ஒன்றே நிரந்தர தீர்வாகும் மற்றும் புத்திசாலித்தனமும் ஆகும்....
* சங்கங்களை இந்நேரத்தில் குறை சொல்ல விரும்பவில்லை, ஆனால் எங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்கிற்கு செல்லாமல் இருந்த உங்களைப் பற்றி என் மனதில் ஆழமான கருத்து பதிந்து விட்டது இதை தவிர்த்து நான் வேறு எதுவும் உங்களை நான் சொல்ல விரும்பவில்லை..
* அதே வேளையில் சில சங்கங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று போராடி இருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது
* ஏனெனில் அவர்கள் மட்டுமே தற்பொழுது மேல்முறையீட்டிற்கு செல்ல முடியும் என்பது முக்கியமான விஷயமாக கருத வேண்டும்.....
* அரசு மூத்த ஆசிரியர்களுக்கு உதவி புரிவதாக நினைத்தால், அனைத்து ஆசிரியர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தால், மேல்முறையீடு மட்டுமே சிறந்த வழி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது தேர்வு என்பது தீர்வு அல்ல இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் பணியில் இருப்பதற்கு விலக்கு பெற்று தாருங்கள் உச்ச நீதிமன்ற கட்டாய கல்வி சட்டத்தின் படி மற்றவை நடக்கட்டும்....
* அனைத்து மூத்த ஆசிரியர்களும் நாங்கள் தேர்வு எழுத மாட்டோம் ,அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று என்று ஒற்றுமையாக இருப்பீர்களா? இப்பொழுது நீங்கள் அனைவரும் முந்திக் கொண்டு தேர்விற்கு அப்ளை செய்வது எவ்விதத்தில் நியாயம்? எந்த விதத்தில் நீங்கள் முந்திக்கொள்கின்றீர்கள்?
* அனைத்து மூத்த ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து நாங்கள் தேர்வு எழுத மாட்டோம் பணியில் இருப்பதற்கு விலக்கு தாருங்கள் என்று கேட்க மாட்டீர்களா?
* உங்களுக்கு வயது இருக்கின்றது உங்களால் படிக்க முடியும் என்று தானே முந்திக் கொள்ள முயற்சி செய்கின்றீர்கள்?
* சமூக அறிவியல் ஆசிரியரான எனக்கு 150 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்கள் சமூக அறிவியலில் வருவது ஆறுதல் தக்கதாக உள்ளது ஆனால் மற்ற பாடங்களில் என் நிலைமை கேள்விக்குறியே....
* அனைவரும் ஒன்றிணைந்து தேர்வெழுதாமல் பணியிலிருந்து விலக்கு பெரும் வரை நாங்கள் தேர்வு எழுத மாட்டோம் என்று சொன்னால் எந்த அரசாங்கமும் நீதிமன்றமும் உங்களை என்ன செய்து விடப் போகின்றது?
* ஒன்றிணைந்து இப்பிரச்சனையிலிருந்து மீள முயற்சி செய்வதே சிறந்தது எளிமையானது...
*உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பற்றி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது....
*அவர் பதவி உயர்வு செல்வதற்கு தகுதி தேர்வு எழுதுவாரா என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றது....
* நீங்கள் மேல் முறையீடு செய்யும் பொழுது இவ்வழக்கானது மீண்டும் அதே நீதிபதிகளுக்கு செல்லும் என்பதை மறந்து விட வேண்டாம்......
* ஒரு நீதிபதியை விமர்சனம் செய்வது மற்ற நீதிபதிகளும் ஏற்றுக்கொள்வாரா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகின்றேன். உச்சநீதிமன்றத்தை விமர்சனம் செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது...
* உச்சநீதிமன்றம் தனது சிறப்பதிகாரமான 142 பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு கொடுக்கும் பொழுது ஏன் பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியில் தொடர்வதற்கு முற்றிலும் விலக்கு கொடுக்க முடியாது ?நிச்சயமாக தீர்வு அடுத்த படியில் உள்ளது என்பதை அனைத்து ஆசிரியர்களும் உணர வேண்டும்......
*அனைத்து மாநில ஆசிரியர்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளதால் உச்சநீதிமன்றம் நிச்சயம் நல்ல தீர்வை வழங்கும்.*
( இவ்வாறு கருத்துக்களை வைத்தால் மூத்த ஆசிரியருக்கு எதிராகவே இவர் ஏன் எழுதுகின்றார் என்று விமர்சனங்களையும் வைப்பர், பிரச்சினையை புரிந்துகொள்வது தீர்வைத்தரும்)
ஒற்றுமையாக இப்பிரச்சனையில் இருந்து மீள முயற்சிப்போம்! நன்றி!
No comments:
Post a Comment