TET - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Tuesday, September 2, 2025

TET - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

 




செப்டம்பர் 1 அன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான தீர்ப்பானது தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது


உச்சநீதிமன்றம் 55 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது 


பல்வேறு ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணியில் உள்ளதாலும் தற்போது திடீரென்று தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்ற கொள்கை முடிவினை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது 


அவ்வாறு கொள்கை முடிவு எடுக்கும் பட்சத்தில் பல வருடங்களாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மூத்த ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 


இது தொடர்பாக ஆசிரியர்கள் தங்கள் சார்ந்துள்ள சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து வருகின்றனர்



No comments:

Post a Comment

Post Top Ad