தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 'டெட்' தகுதித்தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலாளர் நல்லதம்பி கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) என்பது ஆசிரியர்களை முதன் முதலில் நியமனம் செய்யும் போது தான் தேவை. ஆசிரியராக நியமனமாகி 15, 20 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்போது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறுவது ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே தகுதித்தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
செப்., இறுதிக்குள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நியமனத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை.
தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைந்து செயலாற்றி பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நிறுவன தலைவர் மாயவன் அறிவுறுத்தலின்படி செப்.,18 ல் (நாளை மறுநாள்) மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது என்றார்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு தேர்வு எழுதி பாருங்கள். கேள்விகள் . நீங்கள் நடத்தும் பாடத்தில் இருந்து தான் ketparkal
ReplyDelete