TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..
தமிழக அரசு நடத்தும் டிஎன்டெட் தகுதித் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப். 8) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான இன்று ஆசிரியர் தேர்வு வாரிய முகவரி முடங்கியது. இதனால், தேர்வர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment