Click Here to Download - TET - Supreme Court -Official Judgement Order Copy - Pdf
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழியாக இதுவரை வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் சில கருத்துக்களை நாம் புரிந்துகொள்ளலாம்
ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகிய இரண்டிற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
எனவே பதவி உயர்வுக்கு டெட் தேவை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது
இந்நிலையில் தீர்ப்பு (இன்று )வெளிவந்த நாளிலிருந்து ஓய்வு பெற வரை ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் உள்ளவர்கள் (அதாவது 31/8/2030 வரை ஓய்வு பெறுபவர்கள்) இன்றைய தினம் அவர்கள் வகிக்கும் பதவியில் தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெறும் வரை தேர்வு எழுத தேவையில்லை
எனினும் அவர்கள் இக்காலங்களில் பதவி உயர்வு பெற வேண்டுமாயின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகிறது
அதேபோன்று இன்றைய தேதியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளான 29 7 2011 க்கு பிறகு பணி நியமனம் பெற்ற அனைவரும் தகுதித் தேர்வை இன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதற்கு முடிக்க வேண்டும்
அதாவது 31 8 27க்குள் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும்
தமிழகத்தை பொறுத்தவரை இக்கால கட்டங்களில் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களே எனவே இந்த கட்டாய தேவை யாருக்கும் எழவில்லை
சில நிதி உதவி பள்ளிகளில் இக்காலகட்டங்களில் நியமனம் பெற்றவர்கள் இந்த இரண்டு ஆண்டுகளை பயன்படுத்தி தனது பணியினை நிரந்தரம் செய்து கொள்ளலாம் அவர்களுக்கு இது வாய்ப்பு அளிப்பதாக அமைந்துள்ளது
29 7 2011 க்கு முன்னர் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தொடர்ந்து பணியாற்றலாம் அவர்கள் எந்த தேர்வு எழுத வேண்டாம் ஆனால் அவர்கள் பதிவு உயர்வு பெற வேண்டும் எனில் தகுதித் தேர்வு எழுத வேண்டும்
அடுத்ததாக பதிவு உயர்வு பற்றியது
இன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் தகுதி தேர்வு எழுத கால அவகாசம் வழங்கி இருப்பதால் இன்றைய தினம் பதவி உயர்வு பெற்று பணியில் இருப்பவர்களும் இனி பதவி உயர்வு பெற போகிறவர்களுக்கும் இந்த இரண்டு ஆண்டு கால அவகாசம் பொருந்தும் என எண்ணுகிறோம் எனவே பணி மூப்பு அடிப்படையில் அனைவருக்கும் பதவி உயர்வை வழங்கிவிட்டு இரண்டு ஆண்டுகளில் தேர்வை முடித்து தனது பதவி உயர்வை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது பதவி உயர்வுக்கு தகுதி இழக்க நேரிடும் என்ற நிலை வரும்
எனவே அரசு விரைவில் பணியில் இருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் என இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் நான்கு தேர்வுகள் ஆவது நடத்த முன்வரும் இந்த நான்கு தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் தொடர்ந்து பணியாற்றவும் பதவி உயர்வும் பெறவும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள்
இவை அனைத்தும் இதுவரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும் தீர்ப்பு நகல் கிடைக்கப் பெற்ற பின்பு உறுதியான இறுதியான கருத்துக்கள் வலுப்பெறும் முழுமை பெறும்
எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் தீர்ப்பு நகல் கிடைக்கும் வரை அவரவர்கள் அவரவர் விருப்பப்படி அனைவரும் தேர்வு எழுத வேண்டும் அனைவரும் தேர்வு தேர்ச்சி பெறவில்லை எனில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் பதவி உயர்வு சென்றவர்கள் அனைவரும் கீழே இறக்கப்படுவார்கள் இன்றைய தினத்தில் இருந்து தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் போன்ற புரளிகளை பரப்ப வேண்டாம்
இதுவரை அமைதி காத்த நாம் இனியும் சில நாள் அமைதி காத்தால் முடிவு நன்றாக அமையும்.
தகுதி தேர்வு முடிக்க கால அவகாசம் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்டு இருப்பதால் தமிழக அரசாங்கம் பதவி உயர்வை பணிமூப்பின் அடிப்படையில் நடத்தி பதவி உயர்வில் செல்ல வேண்டிய 3 ஆயிரம் காலி பணியிடங்களையும் நிரப்பி அவர்களுக்கும் இந்த இரண்டு ஆண்டு கால அவகாசத்தை வழங்கி அதற்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன
என்பதே நமது கருத்து
No comments:
Post a Comment