ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30
1. ஐஐடி மெட்ராஸ், அதன் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம், ஸ்வயம் பிளஸ் தளம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் AI படிப்புகளை வழங்குகிறது.
2. 25 முதல் 45 மணிநேரம் வரையிலான இந்தப் படிப்புகள், கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு அத்தியாவசிய AI அறிவு மற்றும் நடைமுறைக் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
3. இந்தப் படிப்புகள் இலவசம் என்றாலும், சான்றிதழ் பெற விரும்பும் ஆசிரியர்கள் தேர்வெழுதி, ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதைப் பெறலாம்.
4. ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி வரை https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses இல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் .
ஆசிரியர் பணியை செய்பவர்கள், ஆசிரியராக விரும்புகிறவர்கள் இந்த படிப்பின் மூலம் பயன்பெறலாம். செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதல், கருவிகள் மற்றும் செயல்முறை திறன் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல், மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏஐ பயன்பாடு குறித்து கற்பிக்கப்படும். மாணவர்கள் சார்ந்த கற்கும் முறையின் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் குறித்த தெளிவை இந்த படிப்பு ஏற்படுத்தி தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நர்சரி வகுப்பு ஆசிரியர்கள் முதல் 12-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை இதில் கலந்துகொள்ளலாம்.
ஆங்கில மொழியில் அதிகபடியாக 40 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம் சென்னை ஐஐடி நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கிரெட்டி வழங்கப்படும். முழுமையாக முடித்து தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்மைகள் என்னென்ன?
- விரும்பிய நேரத்தில் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வழியாக படிக்கலாம்.
- நடைமுறை பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
- வார மதிப்பீடு தேர்வுகள், நோட்ஸ் வழங்கப்படும்.
- வீடியோ வடிவில் வகுப்புகளை பார்க்கலாம்.
- குறைந்த கட்டணத்தில் தேர்வு நடத்தப்படும்.
- தேர்வை நேரடியாக ஒதுக்கப்பட்ட மையத்தில் சென்று எழுத வேண்டும்.
- தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆசிரியர்களுக்கான ஏஐ மட்டுமின்றி, சென்னை ஐஐடி மூலம் வழங்கப்படும் இதர ஏஐ படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு, வகுப்பு ஆகியவை இலவசமாகும். சான்றிதழ் பெற தேர்விற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் இந்த படிப்பு மூலம் பயன்பெறலாம்.

No comments:
Post a Comment