சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் தேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
அனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டை பார்த்து பெருமைப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு ஓரே மாதிரியான சமூக நீதி சிந்தனை உள்ளது. கலைஞர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கை தெலங்கானாவில் உள்ளவர்களை மிகவும் ஈர்த்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment