90,000 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அன்பில் மகேஷ்! - Asiriyar.Net

Sunday, September 7, 2025

90,000 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அன்பில் மகேஷ்!

 




தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 


கிருஷ்ணகிரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆகியோர் பங்கேற்று போக்சோ சட்ட நுணுக்கங்கள், சாதக பாதகங்கள், குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் போக்சோ குறித்து சட்டம் நுணுக்கம் அதை சார்ந்த மனநலம் பாதிப்பு, பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதுக்கும் உட்பட்டு கிருஷ்ணகிரியில் முதல் முறையாக விழிப்புணர்வு பயிற்சி முகாம் தொடங்கி உள்ளோம். 


இதில் தமிழக முழுவதும் 90 ஆயிரம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்கு கருத்தாளர்கள் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இன்று தொடங்கி உள்ளோம். பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், தவறுகள் நடந்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம், இருந்தாலும் தவறு நடந்தால் அதை தெரிவிக்க ஒரு சிலர் தயங்குகின்றனர். 


பெற்றோர்கள் குழந்தைகள் பயப்பட தேவையில்லை. நீங்கள் தரும் தகவல் ரகசியம் காக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தனியார் பள்ளியை பொறுத்தவரை பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் போக்சோ சட்டம் என்ன சொல்கிறது, அந்த சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தான் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


ஒரு சில ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கு, இந்த சட்டம் குறித்து தெரிந்தால் போதாது, அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு தேவை என்பதற்காகவே நடத்தப்படுகிறது. இந்த சட்டத்தில் முழு பாதுகாப்பான விஷயங்கள் உள்ளது அதை முறையாக செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல் இந்த சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது, முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர அவசரமாக மேற்கொள்ளும் நடவடிக்கையால் ஆசிரியர், ஆசிரியர் குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என கூறினார். 


No comments:

Post a Comment

Post Top Ad