100 % தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் - Schools, HM & Student List - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, September 3, 2025

100 % தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் - Schools, HM & Student List - Director Proceedings

 




10 & 12 வகுப்பு பொத்தேர்வில்  100 விழுக்காடு தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் விழா நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 2025-26 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் .7 ல் வெளியிடப்பட்ட அறிவிப்பான 2024-25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிய அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மற்றும் தமிழ் பாட பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா எதிர்வரும் 07.09.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் . Montfort School ( CBSE ) , No. 15 , 12th Cross Road , Balaji Nagar , Pappakurichi Kattur 620019 , பள்ளியில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.


 எனவே இணைப்பில் கண்டுள்ள விருது பெறவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளை 07.09.2025 மேற்கண்ட பள்ளி வளாகத்திற்கு காலை 07.00 மணியளவில் வருகை புரிந்து விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்து தெரிவு செய்யப்பட்ட தலைமையாசிரியர்களை சார்ந்த பள்ளியிலிருந்து விடுவித்து தகுந்த கடிதம் மற்றும் ஆளறி சான்றிதழுடன் இவ்விழாவில் கலந்து கொள்ளத்தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 இணைப்பு - விருது வழங்கப்படவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல்


Click Here to Download - DSE - 100 Result Schools, HM & Student - Final List - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad