கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்த 104 ஆசிரியர்கள் கைது - Asiriyar.Net

Wednesday, November 6, 2024

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்த 104 ஆசிரியர்கள் கைது

 

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மறியல் செய்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் 104 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.


÷மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம், முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம், 2003-04-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட


ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தை அவர்கள் செய்தனர்.


÷கடந்த வியாழக்கிழமை, பறக்கும் படை ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து 26, 27-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மறியல் போராட்டமும், 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.


÷அதையொட்டி சனிக்கிழமை ஆட்சியரகம் முன்பு சங்க நிதிக்காப்பாளர் எல். சந்தானம், செய்தித் தொடர்பாளர் கே. திருமால் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 10 ஆசிரியைகள், 94 ஆசிரியர்கள் உள்பட 104 கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad