கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கைலாஷ் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கைலாஷ் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தேவனாம்பட்டிக்குச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வந்தது. அதில் கைலாஷ் ஏறியுள்ளார். இந்த நிலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக கைலாஷ் கை வழுக்கி பேருந்தின் முன் வாயில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்துள்ளார்.
பேருந்தில் பின்பக்க சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து அறிந்த கடலூர் காவல்துறையினர் விரைந்து வந்து கைலாசின் உடலை நேற்று அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. பேருந்திலிருந்து மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment