26.11.2024 காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிகளிலும் வாசிக்கப்பட வேண்டிய "இந்திய அரசமைப்புச் சட்டம் - முகப்புரை" - Asiriyar.Net

Tuesday, November 26, 2024

26.11.2024 காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிகளிலும் வாசிக்கப்பட வேண்டிய "இந்திய அரசமைப்புச் சட்டம் - முகப்புரை"

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 - வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் , மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் , அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள் , மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் தன்னாட்சி அதிகார அமைப்புகள் , நிறுவனங்கள் , தன்னாட்சி அரசு நிறுவனங்கள் , அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு , அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


 மேலும் , பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.


"இந்திய அரசமைப்புச் சட்டம் - முகப்புரை"


இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை வாய்ந்த, சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனைச் சுதந்திரமும் அதன் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் நம்பிக்கைகளை கைகொள்ளும் சுதந்திரமும், எதன்மீதும் ஆழ்ந்த பற்றுறுதிகொள்ளும் சுதந்திரமும், வழிப்பாட்டுச் சுதந்திரமும்,


வாழ்நிலையிலும் வாய்ப்பிலும் சமத்துவமும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தையும் அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், உறுதியோடு தீர்மானிக்கப்பட்டு நம்முடைய அரசியலைப்பு நிர்ணய சபையில் இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.




No comments:

Post a Comment

Post Top Ad