அரசுப்பள்ளியில் வகுப்பறையில் தூங்கிய மாணவன் - பூட்டிச்சென்ற ஆசிரியை - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை - Asiriyar.Net

Tuesday, November 26, 2024

அரசுப்பள்ளியில் வகுப்பறையில் தூங்கிய மாணவன் - பூட்டிச்சென்ற ஆசிரியை - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

 

தர்மபுரி அருகே பள்ளி வகுப்பறையில் தூங்கி மானமனை கவனிக்காத ஆசிரியை ஒருவர் பூட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் 


தர்மபுரி அருகே ஏ சக்கரம்ப பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தூங்கிவட்டதாக தெரிகிறது 


மாணவன் தூங்குவதை கவனிக்காமல் ஆசிரியை வகுப்பறையை பூட்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது 


இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் குறித்த நேரத்துக்குள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் தொடர்ந்து அவர்கள் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது மாணவன் கூட்டிச்சென்ற சிறிய சைக்கிள் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்தனர் 


இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வந்த மாணவன் வீடு திரும்பாதது குறித்து எடுத்துக் கூறினர் 


தகவல் அறிந்ததும் ஆசிரியர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து வகுப்பறையை திறந்து பார்த்தனர் 


அப்போது அந்த மாணவன் வகுப்பறையில் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பள்ளி மூடப்பட்டு மூன்று மணி நேரம் மயங்க நிலையில் இருந்த அந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் 


நடந்த சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்ததோடு இந்த சம்பவத்தை வெளியில் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும் தெரிகிறது 


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா அவர்களுக்கு தகவல் கிடைத்தது இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார் 


அதன் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்




No comments:

Post a Comment

Post Top Ad