ஆண் குழந்தைகளுக்கு கூட கொடுமை நடக்குது - அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை - Asiriyar.Net

Monday, November 25, 2024

ஆண் குழந்தைகளுக்கு கூட கொடுமை நடக்குது - அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை

 



சென்னை மாவட்டத்தை சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு குறித்து இதுவரை என்எஸ்எஸ் மூலமாக 1723 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 86 ஆயிரத்து 186 மாணவர்களுக்கும், 8,615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் நடக்கிறது என்கிறோம்.


ஆனால் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளை பத்திரிக்கை செய்திகளை படித்து தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 


யாரும் பயப்படக்கூடாது. இது தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். விழிப்புணர்வு தொடர்பாக ஒரு குறும்படமும் விரைவில் வெளியாகும் என்றார். 


மேலும் முன்னதாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment

Post Top Ad