8th Pay Commission - 2.86 ஃபிட்மென்ட் காரணிக்கு அரசு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ.51,480 ஆக இருக்கும்.
8வது ஊதியக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது ஊதியக் குழுவின் 7,000 ரூபாயில் இருந்து உயர்த்தப்பட்ட 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் கிடைக்கிறது.
8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளம்
இந்நிலையில் தான், 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ.51,480 ஆக இருக்கும்.
இது தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும்போது, ஃபிட்மென்ட் காரணியை மேலும் உயர்த்துவது சம்பளத்தில் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஃபிட்மென்ட் காரணியின் அதிகரிப்பு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பளம் இரண்டையும் உயர்த்துகிறது. 8-வது ஊதியக் குழுவின் கீழ், ஓய்வூதியம் 186 சதவீதம் அதிகரித்து ரூ.25,740ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஊதியக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், அடுத்த பட்ஜெட் 2025-26இல் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கடந்த 2024-25 பட்ஜெட்டில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு, கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டம் டிசம்பர் மாத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் இந்த மாதம் நடைபெறும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment