பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக, அறிவித்த, தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், 2012 முதல் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி பிரியில், 3,700 ஆசிரியர்கள், ஓவியம், 3,700, கணினி அறிவியல், 2,000, தையல், 1,700, இசை, 300, தோட்டக்கலை, 20, கட்டடக்கலை, 60, வாழ்வியல் திறன் பாடத்தில், 200 பேர் என, 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், 12,500 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், 13 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், முதல்வரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சார்பில், பணி நிரந்தரம் குறித்த கோரிக்கையை பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளது என, கடந்த, 12 அன்று தெரிவித்தார்.
இது, பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி, 181ல் சொன்னதை நிறைவேற்றுவார்கள் என, 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு,
அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment