அரசுப் பள்ளியில் இருந்த ஆசிரியையை நேரடியாக சென்று கொலை செய்த இளைஞரின் வெறிச்செயல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாடம் நடத்தாத நேரங்களில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்ற இளைஞர் ஒருவர், அங்கிருந்த 26 வயது ரமணி எனும் ஆசிரியையை கழுத்தில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியதால், பள்ளி வளாகம் அதிர்ச்சியில் உறைந்தது.
உடனடியாக அவரை மீட்ட சக ஆசிரியர்கள், அருகில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியையை கத்தியால் தாக்கி கொலை செய்த மதன் எனும் இளைஞரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
திருமணம் செய்யாததால் ஆத்திரம்:
இந்த விசாரணையில் பல தகவல்களை மதன் காவல்துறையினரிடத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகளான ரமணி (26), மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.
இதற்கிடையில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகனான மதனுக்கு (30), பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து, ரமணியைப் பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment