எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா எடுத்த காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு நிர்வாகியும், அரசு ஆசிரியருமான சீதாராமன் மீது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி செய்யாமல் அரசியல் கட்சிப் பணிகளை மேற்கொண்டதாக, அரசு பள்ளி ஆசிரியர் சீதாராமனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலம் மாவட்டம், அரியாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சீதாராமன் மீது தற்போது இந்த நடவடிக்கை பயந்துள்ளது.
சீதாராமன் அதிமுக கட்சியை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் அளித்த அந்த புகாரில், அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் போல் செயல்பட்டு வருவதாகவும், பள்ளி நேரத்தில் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், செல்போன் மற்றும் மடிக்கணினியை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தொடக்க கல்வித்துறை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment