பெற்றோர்களே கவனம் - 10-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - Asiriyar.Net

Monday, November 25, 2024

பெற்றோர்களே கவனம் - 10-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்

 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளிடம் விசாரித்தனர்.


அப்போது சிறுமி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பத்தாம் வகுப்பு மாணவனை கைது செய்துள்ளனர். அதன் பிறகு மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad