Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, November 28, 2024

CEO கூட்டம் ஒத்திவைப்பு

 



தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத் தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது . 


இதில் துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவா திக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன . அதன்படி நடப்பு மாதத்துக்கான அலு வல் ஆய்வுக் கூட்டம் வேலுார் விஐடி பல்கலைக் கழகத்தில் இன்றும் ( 28 ம் தேதி ) , நாளையும் ( 29 ம் தேதி ) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


 இதில் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , செயலர் . மதுமதி , இயக்குனர் கண்ணப்பன் , தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் , முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்க இருந்தனர் . வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது . 


இதனால் மழைக்கால தடுப்புப் பணிகளில் அமைச் சர்கள் , அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . எனவே , வேலுாரில் இன்று தொடங்க இருந்த கூட் டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.


 மாற்றுத்தேதி பின்பு அறிவிக்கப்படும் என்று சிஇஓகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது


No comments:

Post a Comment

LightBlog