திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி மேட்டூர் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு விஜயகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஜாதிய ரீதியாகவே விஜயகுமார் மாணவர்களை அணுகுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயகுமார் ஒரு மாணவரின் பாட புத்தகத்தில் ஜாதியின் பெயரை எழுதியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கடந்த 19ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசியுள்ளனர்.
ஆனால் தலைமை ஆசிரியர் சரியான விளக்கம் கொடுக்காமல் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பெற்றோருடன் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடவடிக்கை எடுத்த பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment