தொடக்கக் கல்வி - RIESI, Bangalore - 30 Days CELT Programme - 09.12.2024 முதல் 07.01.2025 வரை - தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் - இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக.
பார்வையில் காணும் கடிதத்தின்படி, The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 09.12.2024 முதல் 07.01.2025 வரை 30 Days CELT Programme பயிற்சியானது உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுள், ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம், RIESI, Bangalore லிருந்து பெறப்பட்ட கடிதத்தில் (இணைக்கப்பட் டுள்ளது) தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி,
தேர்ந்தெடுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பமிட்டு Scan செய்து 25.11.2024-க்குள் deeksections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment